குழந்தைகள் குண்டாகலாமா?

SHARE:

உடல் பருக்­கவே கூடாது. அது குழந்­தை­க­ளாக இருந்­தா­லென்ன பெரி­ய­வர்­க­ளாக இருந்­தா­லென்ன உடல் பருத்து விட்­டால், யோகி­யும் ரோகி­யாகி விடு­வார். இந்த 21ஆம் நூற்­றாண்­டில், எமக்­குப் பெரிய சவா­லாக விளங்­கு­வது, பெரி­ய­வர்­கள் குண்­டா­வதைவிட குழந்­தை­கள் குண்­டா­கு­வ­து­தான்.அதிக எடை என்­பது வேறு. குண்டு என்­பது வேறு. அதிக எடை என்­பது ஆபத்­தின் விளிம்­பில் உள்ள நிலை.ஆனால் குண்­டாகி விட்­டால் நிலமை மோச­மாக மாறு­கின்­றது. நல்ல தேக­புஷ்­டி­யு­டன், கொழு­கொ­ழு­வென்று இருப்­பது குழந்­தைக்கு அழ­கு­தான். லக்­டோ­ஜன் பேபி என்று செல்­ல­மாக அழைத்துக் குதூ­க­லிக்கலாம். தவ­றில்லை. ஆனால் இதே குழந்தை குண்­டுக் குழந்­தை­யாக மாறும்­போ­து­தான் நிலமை விப­ரீ­த­மாக மாற ஆரம்­பிக்­கின்­றது.

முன்­னிற்­கும் பசு­பிக் பெருங்­க­டல் நாடு
5-19 வய­தெல்­லைக்­குள் குண்­டாக வளர்­ப­வர்­கள் தொகை , 1975-–2016 கால­கட்­டப் பகு­தி­யில் பத்து மடங்­கா­க­ அ­தி­க­ரித்­துள்­ளது என்­பது உங்­க­ளுக்கு அதிர்ச்­சி­யைத் தரும் ஒரு தக­வ­லாக இருக்­க­லாம். உலக நாடு­க­ளில் சிறு வய­தில் பருத்த உடல்­க­ளைக் கொண்­ட­வர்­கள் என்ற பட்­டி­யலில் மைக்­கு­ரோ­னே­சியா என்ற நாடு முன்­னிற்­கின்­றது.

பசு­பிக் பெருங்­க­ட­லில் நூற்­றுக்கு மேற்­பட்ட தீவு­களை உள்­ள­டக்­கிய நாடு இது­வா­கும். இன்­னொரு தீவுக் கூடட்ட நாடான பொலி­னீ­சி­யா­வி­லும் இதே கதை­தான். இது பசு­பிக் பெருங்­க­ட­லின் நடு மற்­றும் தெற்­குப் பகு­தி­க­ளில் பரந்து கிடக்­கின்­றது. இங்­கும் குழந்­தை­கள் குண்­டா­வது உச்­சத்­தில் இருக்­கின்­றது.

அதிக அளவு வரு­மா­னத்தை ஈட்­டும் ஐரோப்­பிய நாடு­க­ளி­லும், அமெ­ரிக்­கா­வி­லும் குண்­டா­கும் குழந்­தைகள் தொகை குறை­வ­தா­கத் தெரி­ய­வில்லை. உலக நாடு­க­ளில், கிழக்கு ஐரோப்­பிய நாடு­க­ளில்­தான், குண்­டுக் குழந்­தை­கள் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

பல்­வேறு நாட்டு அமைப்­பி­னர்­கள் பல சந்­தர்ப்­பங்­க­ளில் செய்த ஆய்­வு­க­ளின் முடி­வில், எம்மை அதிர்ச்­சி­ய­டைய வைக்­கின்­றன. இந்த மோச­மான புள்ளி விவ­ரங்­கள். ஐ.நா.சபை கடந்த ஆண்டு சமர்ப்­பித்த புள்ளி விவ­ரங்­களை சற்றே கவ­னி­யுங்­கள்.

எந்த நாடும் தப்­ப­வில்லை
1975-–2016 வரை­யி­லான காலப் பகு­தி­யில் பெண் பிள்­ளை­கள் குண்­டா­கும் தொகை, 5 மில்­லி­ய­னி­லி­ருந்து, 50 மில்­லி­ய­னாக உயர்ந்­தி­ருக்­கின்­றது. அதே சம­யம் ஆண் பிள்­ளை­கள் தொகை ஆறு மில்­லி­ய­னி­லி­ருந்து 74 மில்­லி­ய­னாக ஏற்­றம் கண்­டுள்­ளது. உல­கின் எந்த நாடுமே தப்­ப­வில்லை என்­கி­றார்­கள் அதி­கா­ரி­கள்.

ஆபி­ரிக்க நாடு­க­ளை­யும் இந்­தத் தாக்­கம் விட்டு வைக்­க­வில்லை. பொது­வாக ஆபி­ரிக்க நாடு­க­ளில் இந்த விகி­தம் மிகக் குறை­வாக இருப்­ப­துண்டு. ஆனால் இப்­பொ­ழுதோ தென் ஆபி­ரிக்க பிள்­ளை­கள் பருப்­பது, ஒரு தசாப்த காலத்­திற்கு 400 வீதம் என்ற அள­வில் உயர்ந்­துள்­ள­தாம். அதெப்­படி குண்­டுக் குழந்­தை­கள் என்று நாம் முடி­வெ­டுப்­பது? உடல் நிறை குறி­யீட்டு எண் கொண்டு இதை நிர்­ண­யிக்­க­லாம்.

ஒரு­வ­ரது உய­ரத்­தை­யும் எடை­யை­யும் வைத்து இந்த எண்ணை அறி­ய­மு­டி­யும். இந்த 30ஐ தாண்­டி­னால் குண்டு என்ற பட்­டி­ய­லில் சேர்த்து விடு­கி­றார்­கள்.

9 மில்­லி­ய­னால் அதி­க­ரிப்பு
இனி குழந்­தை­கள் விட­யத்­தைப் பார்ப்­போம். 1990க்கும் 2016க்கும் இடைப்­பட்ட காலத்­தில், 5 வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­கள் உடல் பருக்­கும் தொகை 32 மில்­லி­ய­னி­லி­ருந்து 41மில்­லி­ய­னாக உயர்ந்­துள்­ளது. 26 வருட காலத்­தில் உயர்ந்த தொகை 9 மில்­லி­யன்! இந்­தக் கால­கட்­டத்­தில் பிள்­ளை­க­ளின் பழக்க வழக்­கங்­கள் நன்­றாக மாறி­யி­ருப்­பதே இதற்­கான கார­ணம்.
அலை­பே­சி­க­ளில் அதிக நேரம் செல­வி­டல், நான்கு சுவ­ருக்­குள் இருந்து கொண்டு தங்­கள் பொழு­தைப் போக்­கு­தல், மாக்­டொ­னால்ட்ஸ் ஹம்­பே­க­ரும், கோலா­வும், சிப்­ஸூம் சாப்­பி­டும் பழக்­கத்தை வளர்த்­தல் இந்­தப் பிள்­ளை­களை இப்­ப­டி­யொரு நிலைக்கு மாற்­றி­யி­ருக்­கின்­றன. இது ஐ.நா.சபை எடுத்த ஒரு புள்ளி விப­ரம்.

உடல் பரு­ம­னும் தொட­ரும் வியா­தி­க­ளும்
இன்­றைய கோலம் தொடர்­வது, பி்ள்ளைக­ளுக்கு ஒரு இருண்ட எதிர்­கா­லத்தை தரப்­போ­வது என்­பது நிச்­ச­யம். இந்­தப் போக்கு நீடித்­தால், 2025அள­வில் இளம் பிள்­ளை­கள் உடல் எடை அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­வது 70 மில்­லி­ய­னாக உயர்ந்து விடும் என்று ஒரு குண்­டைத் தூக்­கிப் போடு­கி­றார்­கள் உலக சுகா­தார சபை அதி­கா­ரி­கள்! அதி­க­ரிக்­கும் எடை உடம்­பைச் சும்மா விட்டு விடுமா? இனிப்­புப் பண்­டங்­க­ளில் இலை­யான் மொய்ப்­பது போல, இத­யம் சம்­பந்­த­மான வியா­தி­கள், நீர­ழிவு, புற்று நோய் , மூட்­டுக்­க­ளில் பல­வீ­னம் என்று சங்­கி­லித் தொட­ராக பல நோய்­க­ளுக்கு பிள்­ளை­கள் ஆளா­கும் அவ­லம் வந்து சேர்­கின்­றது.

குழந்­தை­கள் குண்­டா­வ­தேன்?
பிள்­ளை­கள் கரு­வில் உண்­டா­கும் சூழல் தொடக்­கம், அவை பிறந்து வள­ரும் வரை, வௌிச்­சூ­ழல்­கள் இவர்­க­ளைப் பாதிக்­கத் தவ­று­வ­தில்லை. சில தாய்­மா­ருக்கு பிர­சவ காலங்­க­ளில் உரு­வா­கும் நீர­ழிவு வியாதி, பிறக்­கும் பிள்­ளையை அதிக எடை­யு­டன் பிறக்க வைத்து, பிறி­தொரு காலத்­தில் நீர­ழிவு வியாதி உள்ள பிள்­ள­ளை­யாக மாற்றி விடும் வாய்ப்பு இருக்­கின்­றது.

குழந்­தை­க­ளுக்­கும், பிள்­ளை­க­ளுக்­கும் கொடுக்­கும் உண­வில் தாய்­மார் அதிக கவ­னம் செலுத்த வேண்­டி­ய­வர்­க­ளா­கி­றார்­கள். அதிக கொழுப்­புள்ள, சீனி­யுள்ள, உப்­புச் செறிவு அதி­க­மான உண­வைப் பிள்­ளை­கள் அதி­கம் உட்­கொள்­ளும்­போது, பிள்­ளை­கள் உடல் பருக்க வழி சமைக்­கப்­பட்டு விடு­கின்­றது.

நல்ல சத்­துள்ள, ஆரோக்­கி­ய­மான உணவு தாய்க்­குக் கிடைக்­கா­த­தும் ஒரு கார­ண­மாக அமை­ய­லாம். நல்ல உண­வு­கள் பற்­றிய விப­ரங்­கள் தெரி­யாமை இன்­னொரு கார­ண­மாக அமை­ய­லாம். கொழுப்­புச் செறி­வான உண­வு­கள், இனிப்­பான குடி­பா­னங்­கள் பற்­றிய அதீத விளம்­ப­ர­மும், சில பெற்­றோர்­க­ளின் தவ­றான வழி­ந­டத்­த­லுக்கு கார­ண­மா­க­லாம்.

குண்­டுக் குழந்­தை­கள்­அ­ழ­கான குழந்­தை­கள் என்று நம்­பும் கலாசா­ரம் சில தாய்­மாரை, நல்ல புஷ்­டி­யான உணவைப் பிள்­ளைக்கு கொடுக்க வைத்து, மேலும் அதைக் குண்­டாக்­க­லாம். உடல்­ரீ­தி­யாக பிள்­ளை­கள் அதிக நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­வது குறை­வ­தால், உடல் மேலும் பருக்­க­லாம். இப்­ப­டி­யாக, குழந்­தை­கள் குண்­டாக, கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுக் கொண்டு செல்­ல­லாம்.

குண்­டா­வதைத் தடுக்­கவே முடி­யாதா?
ஏன் முடி­யாது? குண்­டா­வ­தைத் தடுக்க நிறைய வழி­வ­கை­ கள் இருக்­கின்­றன. குறிப்பாக தாய்ப்­பால் ஊட்­டு­வதை இங்கே ஞாப­கப்­ப­டுத்­தி­யாக வேண்­டும். பிள்­ளைக்கு பால் ஊட்­டு­வ­தால் தனது அழ­கிய மார்­ப­கம் அழ­கி­ழந்து விடும் என்று மிர­ளும் பெண்­கள் இன்­றும் இருக்­கி­றார்­கள். புட்­டிப் பாலில்­தான் இவர்­களது பிள்­ளை­கள் வளர்­கின்­றன.

குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்­தில், அதற்குத் தாய்ப்பால் ஊட்ட ஆரம்­பிக்க வேண்­டும் என்­கி­றார்­கள் மருத்­து­வர்­கள். முதல் 6 மாதங்­க­ளுக்கு பிள்ளை கண்­டிப்­பாக தாயின் பாலைக் குடிக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­ப­தை­யும் மருத்­து­வர்­கள் வலி­யு­றுத்­து­கி­றார்­கள். 6மாத முடி­வில், குழந்­தைக்கு மேல­தி­க­மாக பாலு­ண­வு­களை அறி­மு­கப்­ப­டுத்­த­லாம். ஆனால் தாய் பாலூட்­டு­வதை 2 வரு­டங்­கள் வரை தொடர்­வது ஆரோக்­கி­ய­மா­னது.

இனிப்­புக்கு பதி­லாக பழங்­கள்
இன்று உலக சனத்­தொ­கை­யின் பத்து வீத அளவு , எடை அதி­க­மா­ன­வர்­கள் என்­ப­தைத் தாண்டி, குண்­டா­ன­ வர் என்ற மட்­டத்தை எட்­டிப் பிடித்­தி­ருக்­கின்­றது. இப்­ப­டி­யான தாய்­மார், தமது கர்ப்ப காலத்­தின் போது , நீர­ழிவு உள்ள குழந்­தை­க­ளைப் பெறும் வாய்ப்பு அதி­ கம்­என்­கி­றார்­கள் மருத்­து­வர்­கள். தாயின் வயிற்­றின் அதிக அளவு புஷ்­டி­யான உணவு குழந்­தைக்­குக் கிடைப்­பது இதற்­குத் தலை­யாய கார­ணம்.

தாய்க்கு பசி உணர்வு அதி­கம்.ஓர் ஆய்­வின் படி, பருத்த உடல்­கொண்ட பெற்­றோர்­கள், பிறக்­கும் குழந்­தை ­யின் ஆரோக்­கி­யம் மீது அதிக தாக்­கு­தல்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்­கள்.

பிள்­ளை­களை பழம் சாப்­பிட உற்­சா­கப்­ப­டுத்­து­வது பெற்­றோர்­க­ளின் கட­மை­யா­கின்­றது. இனிப்­பு­க­ளைக் கொடுப்­பதை கூடு­மான அளவு தவிர்த்து பழங்­க­ளைக் குழந்­தை­கள் உண்ண வைப்­பது, மிக­வும் நன்மை பயக்­கும். பெற்­றோர்­தான் ஆரோக்­கி­ய­மற்ற உணவை வாங்கி பிள்­ளை­க­ளுக்குக் கொடுத்து வரு­கி­றார்­கள்.

எனவே சரி­யான உணவைத் தங்­கள் பிள்­ளை­க­ளுக்­குத் தெரிவு செய்து கொடுப்­பது மிக முக்­கி­யம். போஷாக்­கான உணவை அதி­கம் கொடுப்­ப­தும், அதையே மிகக் குறை­வா­கக் கொடுப்­ப­தும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்த வல்­லவை. குறிப்­பாக நக­ரப் புறங்­க­ளில் வாழும் பிள்­ள­ளை­களே குண்­டா­கின்­றன.

அரு­கும் உடற்­ப­யிற்சி
பிள்­ளை­கள் உடற்­ப­யிற்­சி­க­ளில் ஈடு­ப­டு­வது, பெற்­றோர்­கள் ஈடு­பட வைப்­பது இன்­னொரு முக்­கிய அம்­ச­மா­கும். தின­மும் ஒரு மணி நேர­மா­வது குழந்­தை­க­ளுக்கு உடற்­ப­யிற்சி தேவை என்­கி­றார் குழந்தை மருத்­து­வ­ரான செனிவிரட்ண.இவர் கொழும்­பின் பிர­பல்­ய­மான லேடி றிட்ஜ்வே குழந்­தை­கள் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­று­ப­வர்.

உடற்­ப­யிற்சி என்­பது ஒரு பிள்ளை எதை­யா­வது சாதிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ, அல்­லது பிறரை மகிழ்­விக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ இருக்­கக் கூடாது. பிள்ளை விரும்­பிச் செய்­யும் பயிற்­சி­யாக இது இருக்க வேண்­டும் என்­கி­றார் இவர்.

அதிக எடை உள்ள பிள்­ளையை திட்­டு­வது எந்த வழி­யி­லும் உங்­க­ளுக்கு உத­வப் போவ­தில்லை என்று பெற்­றோரை இவர் எச்­ச­ரிக்­கி­றார். அந்­தப் பிள்ளை குண்­டாகி விடா­மல் தடுக்­கும் வழி­களை பிள்ளை மேற்­கொள்ள வழி­காட்­டு­வதே உங்­களது தலை­யாய பணி என்­ப­தை­யும் இவர் வலி­யு­றுத்­து­கி­றார். உனக்கு ஒரு நாள் நீர­ழிவு வியாதி வரப்­போ­கின்­றது என்று பய­மு­றுத்­தா­தீர்­கள் என்­ப­தை­யும் இவர் கோடிட்­டுக் காட்­டு­கி­றார்.

பிள்­ளை­ க­ளைச் செய்­யத் தூண்­டும் உடற்­ப­யிற்சி அவர்­க­ளுக்கு ஒரு தண்­டனை போல் இல்­லா­மல், அவர்­கள் மகிழ்ச்­சி­யோடு செய் யும் ஒன்­றாக இருப்­பது முக்­கி­யம். ஆறு மாத காலத்­திற்­கா­வது உங்­கள் வழி­காட்­ட­லு­டன் பயிற்­சி­க­ளைச் செய்­யும் பிள்ளை, பின்பு அதையே தன் பழக்­கத்­தில் கொண்டு வந்து விடும்.

உணவு முறை­கள் மாற­வேண்­டும்
அந்­தந்த நாடு­க­ளுக்கு ஏற்ப பொல்­லாத உண­வு­கள் பிள்­ளை­க­ளை­யும், பெரி­ய­வர்­க­ளை­யும் தாக்­கு­கின்­றன. ஐரோப்­பிய நாடு­க­ளில் ஹம்­பேக்­கர், சிப்ஸ் எனப்­ப­டும் கிழங்­குப் பொரி­யல், கோலா , பிட்ஸா போன்­றவை இந்­தப் பொல்­லாத ரகத்­தைச் சேர்ந்­தவை.

வாய்க்கு மிகச்­சு­வை­யாக இருக்­கும் இந்த உண­வு­கள், சிறு­வர் சிறு­மி­யரை மாத்­தி­ர­மல்ல, உண­வ­கங்­க­ளுக்கு பிள்­ளை­களை அழைத்­துச் செல்­லும் பெற்­றோ­ருக்­கும் பிடித்­த­மான உணவு வகை­க­ளாக இருக்­கின்­றன. இலங்­கை­யில் வடை, மோத­கம், றோல்ஸ், பற்­றிஸ், மிக்­ஸர் போன்ற நொறுக்­குத் தீனி­கள், ஃபிரைட் ரைஸ், பிரி­யாணி, கொத்து ரொட்டி போன்ற உணவு வகை­க­ளில் இங்­குள்­ள­வர்­க­ளுக்கு மோகம் அதி­கம்.

ஐரோப்­பிய கலாசா­ர­மான கோலா அருந்­தும் கலாசார­மும், இங்­குள்ள பிள்­ளை­க­ளி­டம் தொற்­றி­யி­ருக்­கின்­றது. அடிக்­கடி லீவில் தாய­கம் வந்து போகும் உற­வி­னர்­கள்­தான் இதற்கு உப­ய­கா­ரர்­கள். வேக உணவு என்று ஆங்­கி­லத்­தில் அழைக்­கப்­ப­டும் இந்த உணவு வகை­ய­றாக்­க­ளில் சுவை அதி­கம் என்­பது போல கொழுப்­பும், கலோ­ரி­யும் அதி­கம். நிறை­யச் சீனி­யும் இருக்­கின்­றது.

விளை­யும் பயிர் முளை­யி­லேயே கருக , பயிரை விதைத்து வளர்க்­கும், பெற்­றோ­ரா­கிய நாமே கார­ண­மா­க­லாமா? இலங்­கை­யில் பிள்­ளை­கள் பழம் சாப்­பி­டு­வ­தும், பாகற்­காய், வெண்டி போன்ற சத்­தான மரக்­கறி வகை­களை உண்­ப­தும் அடி­யோடு தவிர்க்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த விட­யத்­தில் பெற்­றோர் கவ­னிப்பு தேவை. மா, பலா, வாழை என்று பழங்­கள் வரி­சை­யா­கக் காத்­தி­ருக்­கின்­றன? இவற்­றின் சுவை­கைளை பிள்­ளை­
க­ளுக்கு அறி­யத் தாருங்­க­ளேன் அன்­புப் பெற்­றோரே.

Facebook Follow

சமூக சீர்கேடுகள்

இலங்கை செய்திகள்

Name

Arokiya unavu in tamil,9,Beauty Tips Tamil,10,bellyfat,4,Bone Cancer,1,Chettinad Recipes Tamil,1,Eye Problems,1,fruits tips,1,Health tips,32,ladies,3,Maruthuva Kurippugal in Tamil,2,Mooligai Maruthuvam,1,pregnancy tips,1,Tamil Cooking Tips,1,thoppai kuraiya,5,Weight Loss Tips in Tamil,6,சைவம்,1,தொப்பை குறைய,5,
ltr
item
Health & Beauty Tips: குழந்தைகள் குண்டாகலாமா?
குழந்தைகள் குண்டாகலாமா?
https://3.bp.blogspot.com/-FrsSEHJQ56M/W554pROJxNI/AAAAAAAAHpE/UPr3zFldxkgAnTnBY7sYoA9mGZSz7TDcQCK4BGAYYCw/s640/Capture-54-769x405.jpg
https://3.bp.blogspot.com/-FrsSEHJQ56M/W554pROJxNI/AAAAAAAAHpE/UPr3zFldxkgAnTnBY7sYoA9mGZSz7TDcQCK4BGAYYCw/s72-c/Capture-54-769x405.jpg
Health & Beauty Tips
http://health.yarldeepam.com/2018/09/blog-post_16.html
http://health.yarldeepam.com/
http://health.yarldeepam.com/
http://health.yarldeepam.com/2018/09/blog-post_16.html
true
95020048424008090
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy