கனடிய பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதம் எழுதிய நிலையில் சமூகவலைதளம் மூலம் அவர் பதிலளித்துள்ளார்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophieவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் டுவிட்டரில் @Dave_Kellerman என்பவர் தனது 8 வயது மகன் மைக்கேல் கைப்பட எழுதிய கடிதத்தை பகிர்ந்தார்.
அந்த கடிதம் கனடிய பிரதமர் ட்ரூடோவுக்கு எழுதப்பட்டிருந்தது. அதில், உங்கள் மனைவி தற்போது நலமாக இருக்கிறார் என நம்புகிறேன்.
அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது, உங்களுக்கு அந்த வைரஸ் வரக்கூடாது என விரும்புகிறேன்.
உங்களிடம் கொரோனா வைரஸ் குறித்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். வைரஸ் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளீர்கள்
என் தாத்தா, பாட்டிக்கு கொரோனா வருவதை விரும்பவில்லை, உங்களின் கடின உழைப்புக்கு நன்றி என எழுதியுள்ளார்.
இதற்கு டுவிட்டர் வழியே பதிலளித்த ட்ரூடோ, உங்கள் கடிதத்துக்கு நன்றி மைக்கேல். என் மனைவி Sophie நன்றாக உள்ளார்.
நானும் நலமாக உள்ளேன், கொரோனாவை கட்டுபடுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். உங்கள் தாத்தா, பாட்டி மற்றும் கனடியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.