நீரிழிவின் காரணமாக, உடல் பருமன், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் உணவு ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் கடுமையாக உணவு அட்டவனையை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
உங்களுடைய தினசரி உணவிலும் டயட்டிலும் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம்.
குறிப்பாக டைப் 2 நீரிழிவு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இந்த வெங்காயத்திற்கு இருக்கிறதாம்.
அது எப்படி சாத்தியம்?
வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக உள்ளது. அரை கப் நறுக்கிய வெங்காயத்தில் 26 கலோரிகள் மற்றும் 5.9 கிராம் கார்போ சத்து உள்ளது.
அதிக கர்போஹைட்ரெட் எடுத்துக் கொள்வதன் பக்க விளைவு டைப் 2 நீரிழிவு. வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக இருப்பதால், நீரிழிவு பாதிப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
குறைந்த கார்போ டயட் , உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக இருப்பதால் இதனை தைரியமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் நீரிழிவு பாதிப்பிற்கு மிகவும் ஏற்றது. நார்சத்து உணவுகள் மிகவும் தாமதமாக உடைக்கப்பட்டு, செரிமானம் ஆவதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீடும் தாமதமாகிறது.
நார்ச்சத்து மிக்க உணவுகள் உங்கள் குடல் பகுதியை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது . நீரிழிவில் ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படும் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது.
உயர் நார்ச்சத்து உணவுகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது, இதனால் இதய நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.
மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நியாசின் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது. மெக்னீசியம், ஜின்க், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன. இதனால் தினமும் உணவில் வெங்காயத்தினை சேர்த்து கொள்ளுங்கள்.